ETV Bharat / state

தேர்தல் முடிவு நாள்: சேலத்தில் 1300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு! - காவல்துறை

சேலம்: மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் பாதுகாப்பு பணியில் 1300 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு பணியில் 1300-க்கும் மேற்பட்ட போலீசார்
author img

By

Published : May 22, 2019, 11:45 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே வாக்கு எண்ணிக்கை நாளை(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சேலம் மக்களவைத் தொகுதி வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சேலம் மக்களவைத் தொகுதி ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். குறைந்தபட்சம் 20 சுற்றுகளிலிருந்து அதிகபட்சமாக 25 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிகிறது .

பாதுகாப்பு பணியில் 1300-க்கும் மேற்பட்ட போலீசார்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குலுக்கல் முறையில் ஐந்து விவிபேட் கருவிகளை தேர்வு செய்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ரசீது எண்ணும் பணியும் நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் 1500 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்கு மத்திய ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர், மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர், மாநகர காவல்துறையின் காவலர்கள் அடங்கிய மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள் என்று 1320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

புறநகர் பகுதிகளில் தேர்தல் முடிவு எதிரொலியாக அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:சேலம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் பாதுகாப்பு பணியில் 1300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Body:சேலம் அடுத்த கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 1370 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது இதனிடையே வாக்கு எண்ணிக்கை நாளை(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சேலம் மக்களவைத் தொகுதி வாக்கு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சேலம் மக்களவைத் தொகுதி ஓமலூர், எடப்பாடி , சேலம் மேற்கு, சேலம் வடக்கு ,சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும் .

சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும் குறைந்தபட்சம் 20 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 25 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிகிறது .

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குலுக்கல் முறையில் பல 5 விவிபேட் கருவிகளை தேர்வு செய்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ரசீது எண்ணும் பணியும் நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் 1500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் .

இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்கு மத்திய ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் மாநகர காவல்துறையின் காவலர்கள் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது .

மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர்கள் , உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள் என்று 1320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் .

வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போன் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ள எந்த பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார் .

இந்த விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Conclusion:சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் தேர்தல் முடிவு எதிரொலியாக அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.