சேலம் : திருமணி முத்தாறு போதிய பராமரிப்பு இன்றியும் , உரிய மேலாண்மை இல்லாத காரணத்தாலும், கழிவு நீர் கால்வாயாக மாறியுள்ளது. ஒவ்வொரு முறை ஆட்சியர்கள் இதனை பார்வையிடுவதோடு சரி என்றும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக சேலம் திருமணி முத்தாறில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆயினும் நீர் முழுவதும் நுரை பொங்க செல்கிறது. இதற்கு காரணம், சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள நூற்பாலைகளின் கழிவுகள் நேரடியாக கலப்பதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ரஞ்சிதா கூறுகையில்,” மழை காலங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் இருக்கிறது. யானைக்கால் நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர், நூற்பாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. ” எனத் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சட்ட விரோதமாக மண் அள்ளிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு