ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர் படுகொலை: பணியாளர்கள் போராட்டம்! - Krishnakiri tasmac worker

சேலம்: அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியர் படுகொலை: பணியாளர்கள் போராட்டம்!
author img

By

Published : Aug 16, 2019, 4:34 PM IST

Updated : Aug 17, 2019, 9:10 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் பணிபுரிந்துவந்த ராஜா என்ற ஊழியர், சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இன்று சேலம் அடுத்த சந்தியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மொத்த விற்பனை கிடங்கின் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்றனர்.

டாஸ்மாக் ஊழியர் படுகொலை: பணியாளர்கள் போராட்டம்!

இதில் படுகொலை செய்யப்பட்ட ராஜா குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் ராஜா என்பவர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சேலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:சேலம் அடுத்த சந்தியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மொத்த விற்பனை கிடங்கு வாயில் முன்பு நடைபெற்ற இந்த டாஸ்மாக் பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சேலம் மாவட்ட தலைவர் அண்ணாதுரை ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் .

அதில், " கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்த ராஜா என்ற ஊழியர் சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் .

இந்த கொலை சம்பவம் ஒட்டுமொத்த தமிழக டாஸ்மாக் பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது .

எனவே தமிழக அரசு படுகொலை செய்யப்பட்ட ராஜா குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் விற்பனை பணி நேரத்தை இரவு 8 மணி வரை மட்டும் என்று நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பில்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Conclusion:ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மொத்த விற்பனை கிடங்கு முன்பு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தால் சந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Last Updated : Aug 17, 2019, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.