ETV Bharat / state

நாதியற்று நாறிக்கிடக்கும் சேலம் பெரியார் தெரு - தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு! - Salem Periyar Street

சேலம் : ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானவை சாலை வசதியும், கழிவுநீர்ப்பாதை வசதியும். ஆனால் இவை இரண்டுமின்றி பழைய சூரமங்கலம், பெரியார் தெரு பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

”சாலை, கழிவுநீர்ப்பாதை வசதிகளை சீரமைக்காவிட்டால் ஓட்டுப்போட மாட்டோம்” - விரக்தியின் உச்சத்தில் சேலம் பகுதி மக்கள்!

author img

By

Published : Nov 19, 2020, 10:51 PM IST

Updated : Nov 19, 2020, 11:02 PM IST

மோசமான சாலை வசதி, கழிவுநீர்ப் பாதை எங்கே என்றே தெரியவில்லை! இன்று, நேற்று அல்ல...சேலம் மாவட்டம், பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் தெருவைச் சேர்ந்த மக்கள் இந்த அடிப்படை வசதிகளின்றி கடந்த 30 ஆண்டுகளாக பெரும் போராட்டங்களை தங்களது அன்றாட வாழ்வில் சந்தித்து வருகின்றனர்.

சூரமங்கலம், பெரியார் தெரு
சூரமங்கலம், பெரியார் தெரு

கழிவுநீர் பாதையிலேயே குடிநீர்க் குழாயும் இப்பகுதியில் அமைந்துள்ளது நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் சமீபத்தில் அமைத்துத்தரப்பட்ட கழிவுநீர்ப் பாதையின் சுற்றுச்சுவரை வெறும் கல்லால் தட்டியே உடைத்து விடலாம்.

இவை அனைத்தையும்விட, தங்கள் பகுதி இவ்வாறு இருப்பதைக் கண்டு பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ வெளியே இருப்பவர்கள் யோசிக்கின்றனர் எனக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

இந்நிலையில், தங்களுக்கு எந்தவித நன்மையும் நம்பிக்கையும் அளிக்காத மத்திய, மாநில அரசுகளின் மீது முற்றிலுமாக நம்பிக்கை இழந்துள்ள இப்பகுதி மக்கள், இந்தத் தேர்தலில் தாங்கள் நிச்சயம் ஓட்டு போடப்போவதில்லை என உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பகிர்ந்த அப்பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மி, சத்யா, பிரபு, ரேகா, தமிழ்மணி, அமிர்தம், சக்திவேல், தேன்மொழி ஆகியோர் பேசியதாவது :

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக போராட்டத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஓடிக் கோண்டிருக்கிறது. செல்ல சாலை வசதிகளின்றியும், கழிவு நீரை வெளியேற்ற சரியான கால்வாய் வசதி அமைக்கப்படாமலும் உள்ளதால் நாங்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி உள்ளோம். மழைக் காலங்களில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி இடுப்பளவு வரை தேங்குகிறது.

இக்காலங்களில் தெரு முழுவதும் நீர் சூழ்ந்து விடுவதால், பாம்பு உள்ளிட்ட ஆபத்து மிக்க உயிரினங்களும், புழு, பூச்சிகளும் வீட்டினுள் புகுந்து பெரும் இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன. மேலும், இவ்வாறு தேங்கும் நீரால் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் குழாயின் அருகில் அமைந்துள்ள கழிவுநீர்ப் பாதை

200க்கு‌ம் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இத்தெருவில் எங்கள் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளின் கழிவுகளும் இங்கேயே திருப்பிவிடப்படுகின்றன. நாங்கள் வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கப்படுகிறோம்” என வேதனைத் தெரிவிக்கின்றனர் பெரியார் தெரு மக்கள்.

எங்களது இந்த நிலை குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர், மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் வரை கவனத்திற்குக் கொண்டு சென்றும் இதுவரை எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை. இது குறித்து எத்தனையோ முறை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அரசு அலுவலர்களிடம் நாங்கள் புகார் தெரிவிததுள்ளோம். ஆனால் உரிய அலுவலர்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கண்துடைப்புக்குக் கூறி விட்டு பின் சிறிதளவும் கண்டுகொள்வதில்லை.

ஆண்டுதோறும் வரி மட்டும் உரிய நாள்களில் வந்து வாங்கிச் செல்லும் அலுவலர்கள், வ‌ரி செலு‌த்தத் தவறினால் 10 முறை கூட சலிக்காமல் வந்து கேட்கின்றனர். ஆனால் மக்கள் அளிக்கும் புகாரை ஒரு முறை கூட சரியாகக் கேட்பதில்லை. எங்களுக்கு நாங்களே எல்லாவற்றையும் சரி செய்த பின்னர் வரி மட்டும் ஏன் செலுத்த வேண்டும்? எங்கள் தேவையை நாங்களே பூர்த்தி செய்துகொள்வதற்கு எதற்கு அரசாங்கம்?” என்றும் வருத்தமும் விரக்தியும் ஒருசேர இத்தெரு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முன்னதாக இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பலமுறை கேள்வி எழுப்பியும் தங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவசர காலங்களில் இப்பகுதி இளைஞர்கள் மட்டுமே அனைவருக்கும் உதவ வருவதாகவும், குறிப்பாக கரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிப்பது, அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு வழங்குவது போன்றவற்றை வாரம் ஒருமுறை தாங்களாகவே முன்னெடுத்துச் செய்து தங்கள் பகுதி மக்களை பெருந்தொற்று பயத்திலிருந்து மீட்டுள்ளனர்.

கழிவுநீர்ப் பாதை
கழிவுநீர்ப் பாதை

இந்நிலையில், தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான இக்கோரிக்கைகளை ஏற்று உடனடியாக அரசு இதனை சரிசெய்து தர வேண்டும் என்றும், தாமதமாகு‌ம் பட்சத்தில் வரும் தேர்தலில் தாங்கள் நிச்சயம் ஓட்டுப் போடாமல் எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர் இப்பகுதி மக்கள்.

கம்பீரமாக ஜொலிக்கும் ஈரடுக்கு மேம்பாலம், எடப்பாடி தொடங்கி செல்லும் ரிங் ரோடு, தூர்வாரும் பணிகள் என ஒருபுறம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சேலம் மாவட்டத்தில்தான், மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, கழிவுநீர்ப்பாதை வசதி இன்றி சூரமங்கலம், பெரியார் தெரு மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இனியாவது கண்டுகொள்ளுமா அரசு?

Last Updated : Nov 19, 2020, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.