இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவ மாணவிக்கு உதவிட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்விடுக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் சூரமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் மாணவி செல்வி கோ. நித்திஷா பிரியதர்ஷினி.
நீட் தேர்வில் 444 மதிப்பெண் பெற்ற அவருக்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அவரது தந்தை ஊதுபத்தி விற்கும் தொழிலாளி. அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.96 ஆயிரம் மட்டுமே. தட்டுத் தடுமாறி வறுமைச்சூழலில் இதுவரை படித்துவந்து இவருக்கு, கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலவில்லை.

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை ஏதோ நவீன இராஜாக்கள் படிப்பதற்கான கல்லூரியைப்போல் அரசு நடத்திவருகிறது. வசதியானவர்களுக்கான கல்லூரியாக அரசே மாற்றிவிட்டது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த மாணவி கல்லூரியில் சேர உடனடி நிதி உதவி அவசியப்படுகிறது.
ஒரு ஏழை மாணவி மருத்துவக் கல்லூரியில் சேர நிதி உதவி செய்யுங்கள். மருத்துவராகும் கனவை நிறைவேற்றுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வங்கிக் கணக்கு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
Name: NITHISHA PRIYA DHARSHINI .G
Acc no:1219108038636
Canara Bank
Suramangalam,Salem.
IFS Code : CNRB0001219
MICR code: 636015005
செல் எண் : 88383 45756
இதையும் படிங்க: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை ரிலையன்ஸ்க்கு விற்க திட்டம்?