சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (52). பிவிசி பைப் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு, நிஷாந்த் (22), தனுஷ் (20) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
நிஷாந்த் தனியார் கல்லூரியில் பொறியியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனுஷ், மேட்டூர் மாசிலாபாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்த நிலையில், இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில், இன்று(செப்.12) மூன்றாவது முறையாக மேச்சேரி காவேரி கல்லூரியில் நிஷாந்த் நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், நேற்று (செப்.11) இரவு முழுவதும் படித்துள்ளார்.
தொடர்ந்து, இன்று காலை எதிர்பாராவிதமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து கருமலைக் கூடல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
“எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன.”
உதவிக்கு அழையுங்கள்:
அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060
இதையும் படிங்க: நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!