ETV Bharat / state

'நரிக்குறவ மக்களுக்குச் சோலார் விளக்குகள்' - எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., உறுதி

சேலம்: நரிக்குறவ மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்த எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., அப்பகுதி மக்களிடையே சோலார் விளக்கு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.

author img

By

Published : Feb 20, 2020, 3:18 PM IST

எஸ்.ஆர். பார்த்திபன் ஆய்வு
எஸ்.ஆர். பார்த்திபன் ஆய்வு

சேலத்தின் மையப் பகுதியான பஞ்சம்தாங்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அப்பகுதிக்கு வந்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.ஆர். பார்த்திபன் பேசுகையில், "பஞ்சம்தாங்கியில் வசிக்கும் மக்கள் ஏரியின் கரைப் பகுதியில், வீடு கட்டி வசித்து வருவதால், தார்ச் சாலைகள் அமைப்பதில் சிக்கல் உள்ளது. குடிநீர், மின்சாரம் அமைக்க தொகுதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும். அவர்கள் பகுதியில் சோலார் விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்" என உறுதிபடத் தெரிவித்தார்.

எஸ்.ஆர். பார்த்திபன் ஆய்வு

இதையும் படிங்க: சிறுக சிறுக சேமித்து கட்டிய குடியிருப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்: நியாயம் கேட்கும் நரிக்குறவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.