சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி - விஜயலட்சுமி ஆகியோரின் இளைய மகன் ஜெகநாதன்(35). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையெடுத்து வந்துள்ளார்.
இவர், கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை செம்மாண்டப்பட்டி கிராமம் அருகேயுள்ள சேலம் - பெங்களூரு ரயில்வே தண்டவாளத்தில் அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவலளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவலர்கள், அவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஜெகநாதன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையே காரணம்' - கார்த்தி சிதம்பரம்