சேலம் நெத்திமேடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் வருங்கால தலைமுறையினருக்கு இயற்கையின் முக்கியத்துவம் குறித்தும், மரங்களைப் பாதுகாப்பது, வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் மூன்றாயிரத்து 500 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு மரங்களின் நிலை குறித்து வெளிப்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அனைத்து மாணவர்களும் அமர்ந்து, பச்சை நிற உடையணிந்து பழங்காலத்தில் மரங்கள் எவ்வாறு பசுமையாகக் காட்சியளித்தது என்பதையும், பின்னர் கறுப்பு நிற உடையணிந்து தற்போதைய சூழ்நிலையில் மரங்கள் எவ்வாறு அழிந்துகொண்டிருக்கின்றன என்பதையும், மாணவர்கள் மிக அருமையாக அனைவரின் மத்தியில் செய்துகாட்டினர்.
அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கவும், அதன்பிறகு ஒவ்வொருவரின் பிறந்தநாள் அன்றும் ஒரு மரத்தினை கட்டாயமாக நட வேண்டும் எனவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வினை ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, சின்னத்திரை நடிகர்கள் கமல், சுவேதா, யமுனா கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஆபரேசன் 1... டிமிக்கி வாத்தியார் சஸ்பெண்ட், ஆபரேசன் 2... சத்துணவு சாப்பாடு: அதிரடி காட்டிய ஆட்சியர்