சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இனிப்பகக் கடையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் விழா குறித்து கடையின் நிர்வாக இயக்குநர் சிவராமன் கூறுகையில், ' கடந்த 23 வருடங்களுக்கு முன்பு, எங்கள் இனிப்பகத்தைத் தொடங்கி சேலம் மாநகரில் பேக்கரி, இனிப்பு வகைகளில் ஒரு புதுமையைப் படைத்துள்ளோம். பேக்கரி துறையில் புரட்சியை உருவாக்குவதே எங்களது நோக்கம், இலட்சியமும் ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் குடில் பத்மஸ்ரீ சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, தோட்டா பாலு ஆகியோர் மூலமாக சிறப்பாக வடிவமைத்தோம்.
இரண்டு நாட்களாக 15 பேர் கொண்ட குழுவினர் இந்த குடிலை அமைத்து உள்ளனர்’ என்றார்.
இதையும் படிங்க:
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ் விழா!