சேலம்: அரிய வகை நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் திரளான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டு நாணயங்களை கண்டு ரசித்தனர்.
பழங்காலங்களில் பயன்படுத்தபட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலத்தில் அகரம் நண்பர்கள் குழு சார்பாக பழைய நாணயங்கள், அஞ்சல் தலை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு கண்காட்சி இன்று தொடங்கியது.
இந்தக் கண்காட்சியில் அரிய வகை நாணயங்கள், மன்னர் கால ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. 1957 முதல் 2020 வரையில் ஒவ்வொரு ஆண்டும் அச்சிடப்பட்ட நாணயங்கள் இடம்பெற்றிருந்தன.
மலேசியா, அமெரிக்கா, கென்யா, இந்தோனேசியா போன்ற உலக நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசித்து, அரிய வகை நாணயங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
இன்று தொடங்கிய இந்தக் கண்காட்சி, தொடர்ந்து மூன்று நாட்கள் வரை நடைபெறவுள்ளது என நாணய கண்காட்சி ஏற்பாட்டாளர் சுந்தர வடிவேல் தெரிவித்தார்.
சேலத்தில் அரிய வகை நாணயங்கள் கண்காட்சி - அரிய பொருட்கள்