ETV Bharat / state

கனமழையால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர் - சேலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சேலம்: இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் புறநகர் பகுதியில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதித்துள்ளது.

Salem
author img

By

Published : Oct 22, 2019, 1:53 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் புறநகர், மாநகர் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

அழகாபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுத்துள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஆறு போல ஓடிவருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறன்றனர்.

கனமழையால் சேலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நகரைச் சுற்றி சென்று வருகின்றனர். தொடர்மழை காரணமாக சேலத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 23ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Intro:சேலத்தில் இரவு முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக அழகாபுரம் பகுதியிலுள்ள வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.Body:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவுரமடைந்ததால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சேலம் புறநகர் மற்றும் மாநகர பகுதிகள் முழுவதும் இரவு முதல் காலை வரை கனமழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் மழைநீருடன், கழிவு நீரும் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பாதிப்புக்குள்ளாகினர். அதே போன்று அழகா புரம் பகுதியிலுள்ள பூசாரி தெருவில் வசிக்க கூடிய 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர். ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் போது வீடுகளில் தண்ணீர் புகுவதால், மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மழையின் காரணமாக சேலத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.