ETV Bharat / state

'ரமணா' பட பாணியில் இறந்த பெண்ணுக்கு சிகிச்சை? சேலத்தில் நடந்தது என்ன? - சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

சேலத்தில் இறந்த பெண்ணிற்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Etv Bharatஇறந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை - உறவினர்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 13, 2022, 9:08 AM IST

சேலம்: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா, இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனிதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி அவரது கணவர் மாதேஸ்வரன் மனைவியை தாய் வீட்டில் விட்டுள்ளார்.

பின்னர் வனிதா தனக்கு தானே பேசிக்கொண்டிருந்ததால் அவரை சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து வனிதாவைக் கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் வனிதாவின் உறவினர்கள் தகராறு செய்த நிலையில், வேறுவழியின்றி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு வனிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக வனிதா உயிரிழந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் உறவினர்களிடம் அதனைத் தெரிவிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் மறைத்துவிட்டு தவணை முறையில் பணம் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று (டிச.12) வனிதா இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை ஈடுபட்டனர்.

இறந்த நபருக்கு 3 நாட்களாகச் சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வனிதாவின் கணவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்கள் முன் வைத்துள்ளனர். இதுதொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் முற்றுகையிட்ட வனிதாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வனிதாவின் சடலத்தைச் சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.