சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக இருப்பவர் ராமன். இவர் அனுமதியின்றி தொலைநிலைக் கல்வியில் கண் பற்றிய மருத்துவ பாடம் துவங்க அனுமதி அளித்த கோப்பில் கையெழுத்திட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை இவர் மீது வழக்குப்பதிவு செய்து, பின்னர் துறை ரீதியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கையெழுத்திட்டது உறுதி செய்யப்பட்ட பின், பல்கலைக்கழக ஆட்சிக் குழு துணைவேந்தருக்கு இவரை பணி நீக்கம் செய்ய அதிகாரம் வழங்கியது.
இதனை அடுத்து அவர் இன்று பணி நீக்கம் செய்யப்பட்டார். இதே குற்றச்சாட்டில் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி என்பவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்..