ETV Bharat / state

பெரியார் பற்றி புத்தகம் வெளியிட்ட பேராசிரியருக்கு மெமோ.. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நடவடிக்கை! - குருகுலக் கல்வியின் எதிரி மெக்காலே

Periyar University: பெரியார் பற்றி புத்தகம் எழுதி வெளியிட்ட பேராசிரியருக்கு பெரியார் பல்கலைக்கழகம் மெமோ வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Periyar University
பெரியார் பல்கலைக்கழகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:17 PM IST

சேலம்: பெரியார் ஈ.வெ.ராமசாமி பற்றி புத்தகம் எழுதி வெளியிட்ட பேராசிரியருக்கு பெரியார் பல்கலைக்கழகம் மெமோ வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 17, 2023 தேதியிட்டு, பல்கலைக்கழகம் தரப்பில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணைப் பேராசிரியர் ஆர்.சுப்ரமணிக்கு இந்த மெமோ வழங்கப்பட்டுள்ளது.

அந்த மெமோவில், இணைப் பேராசிரியர் ஆர். சுப்பிரமணி பெரியாரின் போர்க்களம் மற்றும் குருகுலக் கல்வியின் எதிரி மெக்காலே என்றப் புத்தகங்களை பல்கலை நிர்வாகத்தின் ஒப்புதலுடன் வெளியிட்டாரா? இல்லையா என்பது பற்றி ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி பல்கலைக்கழகம் கேட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழக சிண்டிகேட்டின் உறுப்பினராக, தமிழக அரசு இணைப் பேராசிரியர் ஆர். சுப்பிரமணியைத் தேர்வு செய்துள்ள சூழலில், தற்போது பல்கலைக்கழகம் அவரிடம் விசாரணை நடத்துகிறது என்றும் ஊழியர் குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னதாக, இணைப் பேராசிரியர் ஆர்.சுப்ரமணி கடந்த 2007 ஆம் ஆண்டு மெக்காலே என்ற புத்தகத்தை முதன்முதலில் வெளியிட்டார். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் அந்த புத்தகத்தில் மேலும் 60 பக்கங்களைச் சேர்த்து பாரம்பரியக் கல்வியின் எதிரி மெக்காலே என்று மறுபெயரிட்டு வெளியிட்டிருந்தார். இதேபோன்று, கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெரியார் பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார்.

மேலும், பெரியார் பல்கலைக்கழகம் இவ்வளவு நாட்கள் அவரைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது சிண்டிகேட் குழுவில் நியமிக்கப்பட்ட சூழலில், வேண்டுமென்றே அவரது கடந்த கால செயல்பாடுகளை கேள்விக்குறியாக்குவது, பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற மதவாத அமைப்புகள் மூக்கை நுழைக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது என பெரியார்வாதிகள் விமர்சித்துள்ளனர். இந்த விவகாரம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த யானை கூட்டம்! படுக்கை அறைக்குள் பதுங்கி உயிர் தப்பிய குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.