ETV Bharat / state

வேட்பாளர் பெயர் இல்லாததால் குழப்பம் - நேற்று வெளியான தேர்தல் முடிவு - Vellakkalpatti Gram Panchayat vote counting

சேலம்: உள்ளாட்சித் தேர்தலின்போது வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

salem
salem
author img

By

Published : Jan 9, 2020, 7:23 AM IST

சேலத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சாந்தி கண்ணன், விஜயா, ராஜா, ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்ட ஆறு பேர் போட்டியிட்டனர்.

இதில், இறுதி வாக்காளர் பட்டியலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆறுபேர் பெயர்களில் ராஜா என்பவரின் பெயர் இடம்பெறவில்லை என்பது, வாக்கு எண்ணிக்கை நாளன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்குப் பதிவு முடிவுற்றும் வேட்பாளர் பெயர் இல்லாத காரணத்தால், வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நிறுத்தப்பட்டது.

வாக்குகளை எண்ணும் பணியில் தேர்தல் அலுவலர்கள்

இதனையடுத்து வாக்குச் சீட்டு இருந்த பெட்டி கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி நேற்று ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இதில் பதிவான 3 ஆயிரத்து 59 வாக்குகளில் ஆயிரத்து 717 வாக்குகள் பெற்று கத்திரிக்காய் சின்னத்தில் போட்டியிட்ட கண்ணன் என்பவர் ஆயிரத்து 121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: குமரியில் மூன்று இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை!

Intro:ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பதிவான வாக்கு எண்ணிக்கை ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. Body:

சேலம் மாவட்டம், கடந்த டிசம்பர் 27 ம் தேதி வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் சாந்தி கண்ணன், விஜயா, ராஜா கவுண்டர், ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர்.

இதில், இறுதி வாக்காளர் பட்டியலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 6 பேர்களில் ராஜா கவுண்டர் பெயர் இடம் பெறவில்லை என்பது வாக்கு எண்ணிக்கை நாளன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து வாக்கு பதிவு முடிவுற்று வாக்கு எண்ணிக்கை வேட்பாளர் பெயர் இல்லாத காரணத்தால் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து பதிவான வாக்கு பெட்டி கருவூலத்தில் வைக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

Conclusion: இதில் பதிவான வாக்குகள் 3059 வாக்குகளில் 1717 வாக்குகளை பெற்று கத்திரிக்காய் சின்னத்தில் போட்டியிட்ட கண்ணன் 1121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.