சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் தொழில் நெறி வழிகாட்டும் இயக்கமும் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
இதில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு, இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில், சேலம் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன. அந்தந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'கட்டுமானத் தொழிலாளர்கள் வாரிய பணத்தை கொள்ளையடிக்க அரசு முயற்சி செய்கிறது'