சேலம் மாவட்டம் ரெட்டிப்பட்டி - பழைய சூரமங்கலம் பகுதிகளை இணைக்கும் சுரங்கப்பாதை சேதமாகி மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் உள்ளது.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை இணைக்கும் முக்கிய பாதை என்பதால் இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
வாகனம் செல்லும் பாதை, ஆங்காங்கே சுவர்களில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிந்து வருகிறது. குறிப்பாக மின் இணைப்பு இருக்கும் பகுதியிலும் நீர் கசிவு ஏற்படுவதால் இவை பெரிதும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, இந்த சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பின்றி சேதமான சுரங்கப்பாதை - Subway damage
சேலம்: உரிய பராமரிப்பின்றி பழைய சூரமங்கலம் சுரங்கப்பாதை சேதமடைந்துள்ளது.
![பராமரிப்பின்றி சேதமான சுரங்கப்பாதை சுரங்கப்பாதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:06:11:1601904971-salemoldsuramangalam-05102020160806-0510f-1601894286-217.jpg?imwidth=3840)