ETV Bharat / state

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோவில் கைது! - Salem Nursing Student Married Youth Arrested in Pocso ACt

சேலம்: 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Salem Nursing Student Married Youth Arrested in Pocso ACt
Salem Nursing Student Married Youth Arrested in Pocso ACt
author img

By

Published : Dec 10, 2019, 1:24 PM IST

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி மாயமானார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அதனடிப்படையில், காவல் கண்காளிப்பாளர் உத்தரவின் பேரில் சேலம் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையில் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, கிருபாகரனின் நெருங்கிய நண்பர் சதிஷ்குமார் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கிருபாகரன் பாண்டிச்சேரியில் இருப்பதாக அவர் தகவல் அளித்தார். அதன்பின் வீடு திரும்பிய சதீஷ்குமார் காவல் நிலையம் சென்றதில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை குறித்து சதீஷ்குமாரின் பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், சதீஷ்குமாரின் பெற்றோர் சடலத்தை வாங்க மறுத்து சதீஷ்குமாரின் சாவுக்கு காரணமான மகளிர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் காவல் துறை உயர் அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின் சடலத்தை வாங்கிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று புதுச்சேரி சென்ற காவல் துறையினர் கிருபாகரனை கைது செய்து மாணவியை மீட்டு சேலம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அதில், கிருபாகரன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் மது அருந்தி கொடுமை செய்ததால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதும் தெரியவந்தது.

இளைஞர் போக்சோவில் கைது

அதனைத் தொடர்ந்து, 17 மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக கிருபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதன்பின், மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:

ரெக்கார்டு கொண்டுவராததால் ஆசிரியர் கண்டிப்பு - மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

Intro:சேலத்தில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய இருந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

Body:சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகில் உள்ளது திப்பம்பட்டி. இந்தப் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன். 28 வயதான கிருபாகரன் பிளஸ் டூ முடித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கிருபாகரன் அவரது காதல் வலையில் சேலம் டவுன் பகுதியில் இருக்கும் கமலா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்த 17 வயது சென்னை மாணவி சிக்கினார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளி அன்று நர்சிங் மாணவி மாயமானார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவி மாயமானது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமாரை சந்தித்து தங்களது மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தனர். இதனை சேலம் டவுன் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் மகளிர் போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் பிரபாகரனின் நெருங்கிய நண்பர். திப்பம்பட்டி யைச் சேர்ந்த சதீஷ்குமாரை பிடித்து விசாரித்தால் கிருபாகரன் இருக்கும் இடம் தெரியும் என்பதால் கடந்த சனி இரவு சதீஷ்குமாரை அழைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். பிறகு மறுநாள் காலையில் வருமாறு சதீஷ்குமார் இடம் தெரிவித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சதீஷ்குமார் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு அவரது சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சதீஷ்குமாரின் சடலத்தை பெற்றோர் வழங்காமல் சதீஷ்குமாரின் சாவுக்கு காரணமான மகளிர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர். இவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதை ஏற்று திங்களன்று சதீஷ்குமாரின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று புதுச்சேரி சென்ற மகளிர் போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். அவரிடமிருந்து 17 வயது நர்சிங் மாணவி மீட்கப்பட்டு சேலம் அழைத்துவரப்பட்டார். பிறகு நர்சிங் மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட கிருபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கிருபாகரன் திருநெல்வேலியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். மது குடித்துவிட்டு வந்த கிருபாகரன் டார்ச்சர் செய்ததால் அந்த மாணவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு கிருபாகரன் நர்சிங் மாணவியை திருமணம் செய்ய புதுச்சேரிக்கு கடத்திச் சென்று இருக்கிறார். அவர் திருமணம் செய்வதற்குள் சிறுமியை அவளிடமிருந்து மகளிர் போலீசார் மீட்டு சேலம் அழைத்து வந்துவிட்டனர்.

கைது செய்யப்பட்ட கிருபாகரன் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.