ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சேலம் எம்பி - Salem MP protest

சேலம்: பணிநீக்கம் செய்யப்பட்ட கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

author img

By

Published : Feb 20, 2020, 9:30 AM IST

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஒன்றித்தில் தலா இருபது பேர் என மொத்தம் 20 ஒன்றியங்களில் 400 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். 55 ரூபாய் தினக்கூலியாகப் பெற்று தங்களின் பணிகளை தொடங்கிய இவர்கள் அனைவரும் தற்போது 387 ரூபாய் பெற்றுவருகின்றனர். இந்நிலையில் கடந்த 14 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் அனைத்துக் களப்பணியாளர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு எந்தவித முன் அறிவிப்புமின்றி திடீர் என்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

20 ஒன்றியங்களிலுள்ள ஒன்றியக் குழுத் தலைவர்களான அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் இந்தத் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உயர் அலுவலர்களைத் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பார்த்திபன், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க முயற்சித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மக்களின் பிரச்னைகளை ஆட்சியரிடம் மனுவாக அளிக்கக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக பார்த்திபன் குற்றம் சாட்டினார். நீண்ட நேரத்திற்குப் பிறகு குறிப்பிட்ட நிர்வாகிகளுடன் ஆட்சியரை நேரில் சந்தித்த அவர், நீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பார்த்திபன், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், இந்தக் கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்குப் பதிலாக, சிலரை நியமிக்க திட்டமிட்டு அதற்காக அவர்களிடம் பணம் பெற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க...அமித் ஷா- அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.