நாடு முழுவதும் இன்று ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. குறிப்பாக இந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்காலமின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மலர்த்தூவி மரியாதை செய்தார்.
சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி விஜயபிரபாகரன் என்பவர் அப்துல்கலாமின் நினைவகம் முன்பாக கலாமின் ஓவியத்தை தலைகீழாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வரைந்து அங்கிருந்த பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
பின்பு அந்த ஓவியத்தை அப்துல் காலம் நினைவிடத்தில் சமர்ப்பித்த அவர், தான் பத்து ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வருவதாகவும் இந்த ஓவியத்தை ஆறரை நிமிடங்களில் முடிக்க திட்டமிட்டு எட்டு நிமிடங்களில் முடித்துள்ளதாகவும் கல்லூரியில் கலாமின் உருவத்தை நான்கு நிமிடத்தில் தலைகீழாக வரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.