சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் இந்தியன் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏடிஎம்-மிற்குள் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கப்பட்டு இருந்த உள் பெட்டி திறக்க முடியாததால் அந்த நபர் வெறும் கையோடு திரும்பிச்சென்றார்.
ஏடிஎம் இயந்திரம் உடைப்பு படம் 1 இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரும்பாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையை நடத்த உத்தரவிட்டார்.ஏடிஎம் இயந்திரம் உடைப்பு படம் 2 ஏடிஎம் இயந்திரம் உடைப்பு படம் 3 இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் அந்தச் சிசிடிவி காட்சியைக் கொண்டு விசாரணை நடத்தியதில், இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பழனிவேல் என்ற லாரி ஓட்டுநரை கைதுசெய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட பழனிவேலுவிற்கு வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் லாரி ஓட்டுநரின் சிசிடிவி காட்சி இதையும் படிங்க: லேப்டாப் சர்வீஸ் சென்டரில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு