ETV Bharat / state

1.16 மணி நேரத்தில் 13 கி.மீ: உலக சாதனை படைத்த சேலம் சிறுமி - பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி ஓட்டம்

உலகிலேயே முதல்முறையாக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தில் 13 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லாமல் ஓடி எட்டு வயது சிறுமி உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றார்.

Salem girl set a world record of 13 km in 1.16 hours

author img

By

Published : Jan 18, 2021, 1:43 PM IST

சேலம்: கரோனா விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி சேலத்தில் மூன்றாம் வகுப்பு பயிலும் எட்டு வயது சிறுமி பிரதா, 13 கி.மீ தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார்.

சிறுமியின் இந்த சாதனை ஓட்டத்தை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்த சாதனை ஒட்டம் அஸ்தம்பட்டி, 5 ரோடு வழியாக சென்று காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.

Salem girl set a world record of 13 km in 1.16 hours
சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் சிறுமி பிரதா

இதில் 13 கி.மீ தொலைவை 1.16 மணி நேரத்தில் சிறுமி கடந்தார். சிறுமியின் இந்த முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து நோபுல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறுமியை பாராட்டினர்.

1.16 மணி நேரத்தில் 13கி.மீ: உலக சாதைப் படைத்த சேலம் சிறுமி

உலக அளவில் 8 வயதில் 13 கிலோ மீட்டர் தொலைவை, இடையில் நிற்காமல் ஓடி, உலக சாதனையாளர் புத்தகத்தில் சிறுமி ஒருவர் இடம் பிடித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.