ETV Bharat / state

இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி! - paddy cultivation farmer

சேலம்: இயற்கையான முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி மணி சாதனை படைத்துள்ளார்.

இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!
இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!
author img

By

Published : Jan 1, 2020, 7:58 PM IST

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி ஒடசகரை பகுதியைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர், இயற்கை முறையில் சிவன் சம்பா என்னும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ளார்.

இதையடுத்து , இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் மாநில அளவில் விவசாயிகளுக்கான நெல் சாகுபடி போட்டிக்கு அவரை வேளாண் துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். விவசாயி மணி ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையிலும், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிடப்பட்ட சிவன் சம்பா என்னும் நெல் சாகுபடியும் செய்து வருகிறார்.

இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!

இந்தப் பாரம்பரிய நெல் சாகுபடியை கேள்விப்பட்டு நேரில் வந்த வேளாண்மை துறை அதிகாரிகளின் கண் முன்னே, அறுவடை செய்து காண்பித்த விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் மனம் திறந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க...தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ப. சிதம்பரத்தின் பிரத்யேக பேட்டி!

Intro:

இயற்கையான முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து சேலம் மாவட்டம் சங்ககிரி சேர்ந்த விவசாயி மணி சாதனை படைத்துள்ளார் . அவருக்கு வேளாண்துறை அதிகாரிகள் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Body:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி ஒடசகரை பகுதியைச் சேர்ந்தவர் மணி.

விவசாயியான இவர் இயற்கை முறையில் சிவன் சம்பா என்னும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ளார் .

இதையடுத்து , இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் மாநில அளவிலான விவசாயிகளுக்கான நெல் சாகுபடி போட்டிக்கு அவரை வேளாண்துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.
விவசாயி மணி ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையிலும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிடப்பட்ட சிவன் சம்பா என்னும் நெல் சாகுபடி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாரம்பரிய நெல் சாகுபடி கேள்விப்பட்டு நேரில் வந்த வேளாண்மை துறை அதிகாரிகளின் கண் முன்னே, அறுவடை செய்து காண்பித்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாரிகள் மனம் திறந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஆண்டுதோறும் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளுக்கான , ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் செய்த நெல் சாகுபடி விவசாயிகளைத் தேர்வுசெய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு, பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டு இயற்கை விவசாயிகள் கெளரவப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75ஆயிரம் ரூபாயும் ,மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் தமிழக அரசு வேளாண் துறை சார்பாக இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயி மணி கூறுகையில் ," நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய நெல் வகையான சிவன் சம்பா நெல் ரகம் , ஒரு ஏக்கருக்கு 2 கிலோ நெல் நாற்று விடப்பட்டு ஒரு பயிர் முறையில் நடவு செய்து பின்னர் புண்ணாக்கு மற்றும் மாட்டு சாணம் மாட்டுக் கோமியம் போன்றவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்தேன்.

இதில் ஐந்து வகையான மூலிகை செடிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தை தெளிப்பான் மூலம் தெளித்து நெற்பயிரை எந்த பூச்சியும் தாக்காத அளவிற்கு முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்தேன்.

இதனால் பூமிக்கு எந்த ஒரு பாதிப்புமின்றி மண்வளம் மேம்பட்டு மகசூல் செயற்கை உரங்களை பயன்படுத்தி வரும் மகசூலை விட அதிகமாக கிடைத்துள்ளது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்

பேட்டி: மணி விவசாயி சங்ககிரி ஒடசகரைConclusion:மேலும், வேளாண்துறை அதிகாரிகள் முன்னிலையில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து , விவசாயிகள் போட்டித்தேர்வுக்கு தன்னைத் தேர்ந்தெடுத்த வேளாண் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் விவசாயி மணி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.