ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...!

சேலம்: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கிய ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி
author img

By

Published : Apr 19, 2019, 5:02 PM IST

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறும்போது, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் மேலிட பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கும் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி

தொடர்ந்து பேசிய அவர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துணை ராணுவப் படை , ஆயுதமேந்திய மத்திய காவல் படை மற்றும் தமிழ்நாடு காவல்துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், எந்தவித இடையூறுக்கும், அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் பாதுகாப்பாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.