ETV Bharat / state

பல் சிகிச்சை தொடர்பான அரசாணையை கண்டித்து சேலத்தில் மருத்துவர்கள் போராட்டம் - வேலைநிறுத்தப் போராட்டம்

ஆயுர்வேத மருத்துவர்களும் அலோபதி மருத்துவ முறையில் பல் சிகிச்சை வழங்கலாம் என்ற மத்திய அரசின் அரசாணைக்கு எதிராக சேலத்தில் பல் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய பல் மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் செந்தாமரைக்கண்ணன்

author img

By

Published : Dec 11, 2020, 5:51 PM IST

சேலம்: ஆயுர்வேத மருத்துவர்களும் அலோபதி மருத்துவ முறையில் பல் சிகிச்சை வழங்கலாம் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இருப்பதை கண்டித்தும், அந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பல் மருத்துவர்கள் இன்று (டிசம்பர் 11) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக இந்திய பல் மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் செந்தாமரைக்கண்ணன் சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி முறையில் பல் சிகிச்சை வழங்கலாம் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை இந்திய பல் மருத்துவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது . இந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று பல் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இந்திய பல் மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர் சந்திப்பு

சேலத்தில் மட்டும் 250 மருத்துவமனைகள் என தமிழ்நாடு முழுவதும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இன்று மூடப்பட்டன.
300க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை தொடங்கி மாலை வரை இந்த அடையாள ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

பல் மருத்துவத் துறையில் பல்வேறு அதிநவீன அலோபதி சிகிச்சைகள் உள்ளன. அதனை முறையாகப் பல் மருத்துவம் படித்தவர் மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்நிலையில் மத்திய அரசின் இதுபோன்ற அரசாணையை வெளியிட்டிருப்பது மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம். எனவே மத்திய அரசு இந்த குழப்பமான ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் பல் மருத்துவர்கள் இணைந்து நாடு தழுவிய அளவில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் பல் மருத்துவரை சந்திப்பது ஆபத்தா... மருத்துவரின் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.