வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் தாமோதரன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தாமோதரன் சிறையிலிருந்து கடந்த மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாமோதரனுக்கு வேலூர் காவல் துறையினரால் நேற்று குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சேலம் நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டப் போது கைதி தாமோதரன் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்துள்ளதாக கூறி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சுவற்றில் தலையை முட்டிக் கொண்டு தரையில் விழுந்து புரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தாமோதரனை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றார். பிறகு சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் வாளிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை இறப்பு; சோகத்தில் உறவினர்கள்