சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், 60 வார்டுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் ஒப்பந்த பணியாளர்களாகப் பணியாற்றி வருவதால், அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை, ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வந்தது.
அதேபோல ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணப்பயன்கள், வைப்புநிதி ஆகியவை வழங்காமல் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் மாநகராட்சியின் ஆணையரிடம் நேரடியாக புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த துப்புரவு பணியாளர்கள் திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: