மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், சேலத்தில் துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் புதிய திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் ஆயிரம் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு பத்து குழுக்கள் அமைக்கப்பட்டு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சதீஷ், இத்திட்டத்தில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பொது இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்துவர்.
இந்த துப்புரவு பணிகள் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் எனவும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி பணியாளர்களிடம் கொடுத்து மாநகராட்சி தூய்மைப் பணிகளில் ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சேலம் இரும்பாலைப் பேராட்டம் மக்கள் போராட்டமாக வேண்டும் - தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்