ETV Bharat / state

இனி தெரு நாய்களுக்கும் பிரச்னை இல்லை: உணவு வழங்கும் சேலம் மாநகராட்சி

சேலம்: ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல், தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் வாகனங்களை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் தொடங்கி வைத்தார்.

salem corporation arrange foods for street dogs

author img

By

Published : Apr 26, 2020, 11:42 PM IST

Updated : Jul 21, 2020, 7:29 PM IST

கரோனோ வைரஸ் நோய்த்தொற்று பொதுமக்களிடையே பரவி விடாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளன. தடை உத்தரவால் சேலத்தில் உள்ள உணவுக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பசியால் தவிக்கும் தெரு நாய்களுக்கு, சேலம் மாநகராட்சி சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாய்களுக்கு உணவு வழங்கும் வாகனங்களை இன்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தெருநாய்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள சேலம் மாநகராட்சி இன்று முதல் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி மாநகராட்சிப் பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நான்கு வாகனங்களிலும் பன், பிரெட் ஆகிய உணவுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு தெருக்களில் திரியும் நாய்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உணவு வழங்கப்படும்.

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் சேலம் மாநகராட்சி

ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் வரையில் தெருநாய்களுக்கு சேலம் மாநகராட்சி தினம்தோறும் உணவு வழங்கும். சேலத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 980 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். இல்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்' என்று கூறினார்.

இதையும் படிங்க... தெரு நாய்கள் - தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்!

Last Updated : Jul 21, 2020, 7:29 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.