சேலம் மாநகரில் நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனால், சேலம் மாநகரம் முழுவதும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வந்தன.
இருப்பினும் தடையை மீறி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து அபராதம் விதித்தது. இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகள் திறக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
இதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 5 மணி முதல் 12 மணி வரை இறைச்சிக் கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.