ETV Bharat / state

பட்டியல் சமூக குழந்தைகளின் உணவில் மலம் வீசியதாக புகார்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில் பட்டியல் சமூக குழந்தைகளின் உணவில் மலத்தை வீசியதோடு, பெண்கள் மீது அத்துமீறலில் ஈடுபட்டதாக குடும்பமே கண்ணீருடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்

author img

By

Published : May 5, 2023, 9:13 PM IST

Updated : May 6, 2023, 9:45 AM IST

பாதிக்கப்பட்ட பெண் ராதிகா பேட்டி

சேலம்: சங்ககிரி அடுத்த தேவண்ணகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கமலஹாசன் - ராதிகா குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். அதற்காக உரிய வரியும் கடந்த 47 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அந்த குடும்பம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் அவர்கள் வீட்டின் அருகே உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராஜரத்தினம், ஆனந்தராஜ் , பச்சையம்மாள் உள்ளிட்ட சிலர் ராதிகாவின் குடும்பத்தினரை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடந்த சில ஆண்டுகளாக மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், ராதிகா வீட்டிற்குச் சென்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர், குழந்தைகள் உணவு அருந்திக்கொண்டிருந்த போது உணவில் மலத்தை வீசியும், ராதிகா மற்றும் அவரது பாட்டி சுருட்டையம்மாள் இருவரையும் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பட்டியல் சமூக மக்கள் நியாயம் கேட்டபோது, அவர்கள் வீட்டின் அருகே இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தும் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மீது சங்ககிரி காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முருகனிடம் புகார் அளித்ததோடு, தங்களது இடத்திற்கு பட்டா கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கிராம நிர்வாக அலுவலர் முருகனும், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பட்டியல் சமூக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, தக்க நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது, சேலம் மாவட்டத்தில், பட்டியல் சமூக குழந்தைகள் சாப்பிட்ட உணவில் மலம் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியான ''தி கேரளா ஸ்டோரி''!

Last Updated : May 6, 2023, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.