ETV Bharat / state

100% வாக்களிக்க வலியுறுத்தி சேலத்தில் காவலர்கள், உயர் அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி!

author img

By

Published : Mar 17, 2019, 12:39 PM IST

Updated : Mar 17, 2019, 12:44 PM IST

சேலம்: நூறு விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி சேலத்தில் காவலர்கள், உயர் அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கிவைத்தார்.

Rohini

நாடுமுழுவதும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ரோகிணி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, பொதுமக்கள் அச்சமின்றியும் யார் அச்சுறுத்தல் இன்றியும் வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி சேலம் மாவட்டத்தில் இதுவரை அங்கீகாரம் பெற்ற 1,661 துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சேலம் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு தேர்தல் பணிக்காக சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும், காவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அவர்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் 100 விழுக்காடு காவலர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Intro:காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் 100 சதவிகித வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி..

Body:வரும் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடக்க சேலம் மாவட்டத்தில் இதுவரை அங்கீகாரம் பெற்ற 1,661 துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மான ரோகிணி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் குமாரசாமிப்பட்டி யில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, பொதுமக்கள் அச்சமின்றியும் யார் அச்சுறுத்தல் இன்றியும் வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி சேலம் மாவட்டத்தில் இதுவரை அங்கீகாரம் பெற்ற 1,661 துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணிக்காக சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும் காவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் அவர்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் 100 சதவிகிதம் காவலர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். பேட்டி ரோகிணி, சேலம் மாவட்ட ஆட்சியர்

Conclusion:மேலும் சேலம் மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
Last Updated : Mar 17, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.