ETV Bharat / state

சேலத்தில் பெடரல் வங்கி சார்பில் நிவாரண உதவி - கரோனா நிவாரண உதவி

சேலம்: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெடரல் வங்கி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக, வங்கியின் கிளை மேலாளர் தெரிவித்தார்.

Corona relief
Salem federal bank
author img

By

Published : Jun 2, 2020, 3:54 PM IST

கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவானது தற்போது சில தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் பல்வேறு இழப்புகளை சந்தித்த ஏழை-எளிய மக்கள் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் சமூக பொறுப்புணர்வு உள்ள தனிநபர்கள் சார்பிலும் பல்வேறு வகையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சேலம் மாநகரில் இயங்கிவரும் பெடரல் வங்கியின் கிளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் ரூ. 12 லட்சம் மதிப்பில் உணவு, மருத்துவ உதவிகளை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இது குறித்து பெடரல் வங்கியின் சேலம் கிளை மேலாளர் முத்து பிரகாஷ் அளித்த பேட்டியில், "சேலம் அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர் (நோயாளிகளை அழைத்துச் செல்லும் நாற்காலி) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பெடரல் வங்கி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மாநகர காவல் துறையினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உதவியாக ரூ. 2 லட்சம் மதிப்பிலான பேரி கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல சேலத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்ல விரும்பிய தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், வழியில் செலவுக்கு பணம் ஆகியவை ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டன.

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு இலவசமாக கிருமி நாசினி மருந்து, முகக் கவசம், கையுறை வழங்கப்படுகிறது. வங்கி அலுவலகம், வங்கியின் ஏ.டி.எம் மையங்கள் அனைத்தும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி மருந்து மூலம் சுத்தப்படுத்தி வாடிக்கையாளர்களின் நலன் காக்கும் வகையில் வங்கி செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

பெடரல் வங்கியின் இந்த சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளுக்கு வாடிக்கையாளர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மானிய விலையில் திருப்பதி லட்டு : ஹைதராபாத் வாசிகளிடம் அமோக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.