ETV Bharat / state

பொங்கல் பரிசு: ரேஷன் கடை பணியாளரைத் தாக்கிய அதிமுக பிரமுகர் - பெரிய கரும்பு கேட்டு சேலத்தில் ரேஷன் கடை ஊழியர் மீது அதிமுக பிரமுகர் தாக்குதல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு சிறியதாக உள்ளதாகக் கூறி வேறு கரும்பை அதிமுக பிரமுகர் எடுக்க முயன்றபோது, ஏற்பட்ட மோதலில் அவர் நியாயவிலைக் கடை பணியாளரைத் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டது.

salem admk person attacked ration shop worker

author img

By

Published : Jan 11, 2022, 2:38 PM IST

சேலம்: தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் சேலம் பெரியபுத்தூர் பகுதியிலுள்ள சந்தனக்காரன் காடு நியாயவிலைக் கடையில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

அப்பொழுது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான, கோபால் என்பவர் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு சிறிய அளவில் உள்ளது. அதனால் வேறு கரும்பு நானே எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறி, கடையினுள் நுழைந்துள்ளார்.

இதனால் நியாயவிலைக் கடை பணியாளருக்கும் கோபாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நியாயவிலைக் கடை பணியாளரை கோபால் தாக்கினார்.

காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டு
காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனால் அங்குக் காத்திருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் நியாயவிலைக் கடை பணியாளரைத் தாக்கிய கோபால் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைதுசெய்யக் கோரி புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனிடையே பாதிக்கப்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர் கூறுகையில், "நாங்கள் காலை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிவந்த நிலையில் அங்கு வந்த கோபால் என்பவர் கரும்பு சிறிய அளவில் உள்ளது என்று கூறி தகராறு செய்தார். தொடர்ந்து அவர் கடைக்குள் நுழைய முயன்றார்.

அதனைத் தடுத்து நிறுத்தியதால் தகாத சொற்களால் திட்டி ஆபாசமாகப் பேசினார். இதனையடுத்து திடீரென என் சட்டையைப் பிடித்து இழுத்து என்னை அடித்துக் கீழே தள்ளினார். மேலும் அவரது அண்ணன், 'இந்தக் கடையில் நீ வேலை செய்ய முடியாது கொன்றுவிடுவேன்' எனக் கொலை மிரட்டல் விடுத்தார்.

அவர் மீது உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளையும் அடைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: Stalin visits ration shop: ரேசன் கடைகளில் முதலமைச்சர் ஆய்வு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.