சேலம் மாவட்டம் மூன்று ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 26) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களில்லாத 311 கிலோ வெள்ளி கொலுசுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
காரை சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவீந்திர காதம் என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் வெள்ளிக் கொலுசுகளை மகாராஷ்டிராவிற்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கொலுசுகளின் மதிப்பு ரூ. 98 லட்சத்து 42 ஆயிரத்து 850 ரூபாய் ஆகும். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி கொலுசுகள் சூரமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க: குற்ற வழக்குகளை காட்டி பேச்சுரிமையை மறுக்கக் கூடாது, மூத்தப் பத்திரிகையாளர் பட்ரிசியா முகிம் மீதான எஃப்ஐஆர் ரத்து!