சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சாம்பார் பிரகாஷ். இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டதால், காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் அவரைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சாம்பார் பிரகாஷ்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக சிறைக் காவலர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது ரவுடி சாம்பார் பிரகாஷ், அங்கிருந்த பிளேடை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டு கூச்சலிட்டார்.
மேலும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: காவல்துறை வாகனங்களுக்குக் 'காவல்' என தமிழில் பெயர் மாற்றம்!