சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு கருவிகளை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ரோகிணி பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்" நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக சேலம் மாவட்டத்திற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள்சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அனுப்பிவைக்கப்பட்ட கருவிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகளும் கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், " சேலம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது . தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்னணி குறித்து அன்றாடம் நாளிதழ்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் வெளியிட வேண்டும். இதனை கடைபிடிக்காத வேட்பாளர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். வாக்காளர்கள் அனைவரும் எவ்வித அச்சமுமின்றி அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய முன்வரவேண்டும் என்றும் ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்தார்.