திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து தருமபுரி மாவட்டம் காவேரி பட்டணத்திற்கு முருகேசன் என்பவர் டேங்கர் லாரியை, சேலம் மாமாங்கம் பகுதியில் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது மாமாங்கம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது டேங்கர் லாரி மோதி தூக்கியெறியப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல சேலம் டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் சரவணன். இவர் மனைவி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்துவருகிறார். நேற்று காலை தனது மனைவியை சேலத்தில் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் பணிக்கு விட்டு விட்டு வீடு திரும்பியபோது, பெருந்துறையிலிருந்து தருமபுரி நோக்கிச் சென்ற கார் சரவணன் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரண்டு விபத்துகள் குறித்து சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானா விபத்து - உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!