ETV Bharat / state

ஆறு ஆண்டுகளாக பூட்டியிருக்கும் விடுதியை திறக்க மாணவர்கள் கோரிக்கை - Salam district News

சேலம்: ஆறு ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான புதிய விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர சட்டக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதர் மண்டி கிடக்கும் மாணவர் விடுதி
author img

By

Published : Nov 3, 2019, 5:33 PM IST

சேலம் சட்டக் கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக ரூ. 51 லட்சத்தில் விடுதி ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சின்னகொல்லப்பட்டி கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு தனியார் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் படிக்கும் பட்டியலின பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் சேலம் நகரப்பகுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் பட்டியலின மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், அரசு இலவச விடுதி ஒன்றை கட்டித் தர வேண்டுமென்று சட்டக்கல்லூரி மாணவர் அமைப்பினர் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதற்கு பலனாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான 'தாட்கோ' சார்பில் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து ஏற்காடு மலை அடிவாரப் பகுதியான கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் ரூ. 51 லட்சம் மதிப்பில் 2011ஆம் ஆண்டு விடுதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கி 2012-13ஆம் கல்வியாண்டில் பணிகள் முடிக்கப்பட்டன.

புதர் மண்டி கிடக்கும் மாணவர் விடுதி
புதர் மண்டி கிடக்கும் மாணவர் விடுதி

தனியார் சட்டக் கல்லூரி நிர்வாகம் பட்டியலின மாணவர்களுக்கான இடங்களை ஒதுக்குவதில் குளறுபடி செய்ததால், இந்த விடுதி கடந்த ஆறு ஆண்டுகளாக திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விடுதியை திறக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் விடுதி திறக்கபடாமல் இருப்பதால் சில சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்துவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விடுதியை திறக்க மாணவர்கள் கோரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட தாட்கோ அலுவலர்களை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது 'விடுதி பாழடைந்து இருப்பது உண்மைதான். அதை சீர் செய்ய தற்போது தமிழக அரசிடம் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறோம். அந்த நிதி கிடைத்ததும் சீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடுதியை கொண்டுவருவோம்' என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை வனத்துறை விடுதியில் பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

Intro:சேலத்தில் ஆறு ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆதிதிராவிடர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதியை பயன்பாட்டிற்கு, அரசு கொண்டுவர வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Body:சேலத்தில் சட்டக் கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக ரூபாய். 51.04 லட்சத்தில் அரசு சார்பில் மாணவர் விடுதி கட்டப்பட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியில் தனியார் சட்டக்கல்லூரி கடந்த 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் சேலம் நகரப்பகுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்து சட்டம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் அரசு சார்பில் இலவச விடுதி கட்டி தரப்பட வேண்டுமென்று சேலம் தனியார் சட்டக்கல்லூரி மாணவர் அமைப்பினர் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் 'தாட்கோ' சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தனி விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனி விடுதி சேலத்தில் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து ஏற்காடு மலை அடிவாரப் பகுதியான கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் இலவச விடுதி கட்ட இடத்தை தேர்வு செய்து கட்டடம் கட்டும் பணி 2011ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து 2012- 13 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என கொண்டப்பநாயக்கன்பட்டி தனி அரசு விடுதி உருவானது . ஆனால் தனியார் சட்டக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு என நிரப்புவதில் கல்லூரி நிர்வாகம் பல்வேறு குளறுபடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது வரை ஆறு ஆண்டுகளாக ரூ.51 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதி தற்போது பூட்டிய நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் கட்டி முடிக்கப்பட்டு காட்சியளிக்கும் அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதியினது தற்போது புதர்மண்டிய நிலையில் உள்ளது. விடுதி வளாகத்தை அப்பகுதி மக்கள் கழிப்பிடமாகவும் மது அருந்தும் கூடாரமாகவும் மாற்றியுள்ளது மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. மின்விளக்கு உடைக்கப்பட்டும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்து வரும் மக்கள் வரிப்பணத்தில் எழுந்த, அரசு கட்டடம், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் மாணவர் அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். (பேட்டி 1: ரஞ்சித், சட்டக்கல்லூரி மாணவர், சேலம். பேட்டி 2: தினேஷ், மாவட்ட செயலாளர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சேலம்.)

Conclusion:இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட தாட்கோ அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது 'பாழடைந்து இருப்பது உண்மைதான். அதை சீர் செய்ய தற்போது தமிழக அரசிடம் 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறோம். அந்த நிதி கிடைத்ததும் சீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடுதியை கொண்டுவருவோம்' என்று தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.