ETV Bharat / state

மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் - பொது கணக்குக்குழு ஆய்வுக்கூட்டத்தில் தகவல் - A report will be tabled in the assembly

சேலத்தில் 2016-17ஆம் ஆண்டு ரூ.10 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் எனப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்று பொது கணக்குக்குழுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு- பேரவையில் அறிக்கை தாக்கல்

author img

By

Published : Nov 2, 2022, 3:11 PM IST

சேலம்: தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது கணக்குக்குழுவினர் நேற்று சேலத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் குழுவின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் வேல்முருகன், சிந்தனைச்செல்வன், ராஜமுத்து, பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக சேலம் மத்திய சிறைச்சாலை, சேலம் அரசு பொதுமருத்துவமனை, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஆய்வுமேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இதில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், அதன் மதிப்பீடு குறித்தும் அலுவலரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். அதற்கான பணிகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, 'சேலத்தில் பொது கணக்குக்குழு உறுப்பினருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது கடந்த 2016-17ஆம் ஆண்டு ரூ.10 கோடியே 69 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட மருத்துவக்கருவிகள் இதுவரை எதற்கும் பயன்படுத்தப்படாமல் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளன.

இதனை ஆய்வு மேற்கொண்டபோது அந்தக் கருவி சீனாவில் இருந்து பெறப்பட்டதாகவும், ஆனால் அந்த உபகரணத்தில் சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்டது போன்று ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது. அப்போது இருந்த மருத்துவக்கல்வி இயக்குநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாக இந்தக்கருவியை வாங்கியது தெரியவந்துள்ளது.

ரூ.10 லட்சத்துக்கும் மேல் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு அதிகாரமில்லை. இதுதொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த மருத்துவக்கருவியானது டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களைப்பரிசோதிக்க வாங்கியதாகத்தெரிவித்துள்ளனர்.

ஆனால், ரூ.16 லட்சத்துக்கு வாங்கப்பட்ட கருவியில் ஒரு பரிசோதனை செய்ய 45 பைசா மட்டுமே செலவாகும் நிலையில் ரூ.10.69 கோடி முதலீடு செய்து வாங்கப்பட்ட கருவியில் ஒரு பரிசோதனைக்கு ரூ.38.32 செலவாகிறது என்றால், ஏன் பணத்தை விரயம் செய்ய வேண்டும்? எனவே இதில் ஊழல் நடந்துள்ளது.

அப்போதைய சுகாதாரத் துறைச்செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்குத்தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சென்னை சென்ற பிறகு மருத்துவக்கல்வி இயக்குநரை வரவழைத்து விசாரணை செய்ய உள்ளோம்.

மேலும் சேலம் அரசு மருத்துவமனைக்குள் கேண்டீன் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. அதேபோல் மருத்துவர்கள் தங்கும் குடியிருப்புகளுக்கு இதுவரை வாடகை வசூல் செய்யப்படாமல் உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை தருவோம்.

கடந்த 2013-18 வரையிலான காலகட்டங்களில் கனிமவளத்துறையில் விதிமீறல் நடந்துள்ளது. அனுமதி பெறாமல் கனிம வளங்களை குவாரிகளில் இருந்து வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதனைக்கண்டறிய எல்லா குவாரிகளிலும் அப்போது மின்சாரம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது. மின்சாரம் எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டது என்பதை தகவலாக கேட்கவுள்ளோம். விதிமீறல்கள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும்' என்று பொது கணக்குக்குழுத்தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் மிகப்பெரிய மழை பெய்தும் பாதிப்பு குறைவுதான்.. மா.சுப்ரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.