மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக குறைந்துவருகிறது. இதனால் நீர்மட்டம் குறைந்துவருகிறது.
இதன் எதிரொலியாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியிலிருந்து ஆறாயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் வெளியேற்றப்பட்டுவருவதாகப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இன்று காலை எட்டு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.90 அடியாக உள்ளது.
தற்போது மேட்டுர் அணையில் 57 ஆயிரத்து 221 டிஎம்சி அளவு நீர் இருப்பு உள்ளது. பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு ஐந்தாயிரத்து 705 கன அடியாக உள்ளது. நேற்று நீர்வரத்து ஏழாயிரத்து 582 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு - Mettur Dam Water Level
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.