சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எலி உலாவரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவில் ஆக்சிஜன் பைப் லைன் மீது எலி சாவகாசமாக ஓடுகிறது.
ஒருவேளை, எலி அந்த ஆக்சிஜன் பைப்லைனை சேதப்படுத்தினால் அது நோயாளிகளுக்கு ஏற்படுத்தும் சிக்கல் ஆபத்தானது என நோயாளிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உணவுப் பொருள்களை எலி கடிக்க நேர்ந்தால், அது தெரியாமல் நோயாளிகள் உணவை சாப்பிட்டாலும் உடல்நலக் குறைபாடு ஏற்படலாம்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், ”மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் உணவுப்பொருள்களை சிந்துவதாலும், தற்போது மழைக்காலம் என்பதாலும் வெளியே சுற்றித் திரியும் எலிகள் மருத்துவமனைக்குள் வந்துள்ளன. எலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க:கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கிடந்த பல்லி!