ETV Bharat / state

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாட்டம்

author img

By

Published : Dec 3, 2020, 7:55 PM IST

புதிய அரசியல் கட்சியை வரும் ஜனவரி மாதம் தொடங்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.3) அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஆங்காங்கே மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் ரஜினி மன்ற தலைமை அலுவலகத்தில் அவரது ரசிகர்கள், நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியடைந்தனர்.

ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

சேலம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதில் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தேனி

தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகே ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

இதையும் படிங்க: அரசியல் கட்சி அறிவிப்பு! - ரஜினி ரசிகர்கள் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.