சேலம்: ரயில்கள், ரயில் நிலையங்களில் பெண் பயணிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரயில்வே காவல்துறையானது பெண் பயணிகளின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்காக, ரயில்மடாட் ஹெல்ப்லைன் 139 என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதனை பெண் பயணிகள் பாதுகாப்புத் தொடர்பான உதவிக்காக அணுகலாம். ரயில்மடாட் வாடிக்கையாளர்களின் குறைகள், விசாரணை, புகார்கள், ஆலோசனை உதவிக்காக, இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த, புதுமையான தொழில்நுட்ப சேவையாகும்.
புகாரின் விரைவான தீர்வுக்காக பயணத்தின்போது இணையம், செயலி, எஸ்எம்எஸ், சமூக ஊடகங்கள், உதவி எண் 139 ஆகியவற்றுடன் ரயில் மடாட்டை அணுகலாம். ஏற்கனவே ரயில்வேயில் பல்வேறு நோக்கங்களுக்காக இருந்த பல ஹெல்ப்லைன்கள், ஒரு ஹெல்ப்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.
அதாவது ரயில் மடாட் ஹெல்ப்லைன் 139 சேவையானது, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் - பனை மேம்பாட்டு இயக்கம்