கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது பொது முடக்கத்தில் சிறிது தளர்வு அளிக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என்ஆர் காங்கிரஸ் தலைவரும் புதுவை மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி சேலம் ஜங்ஷன் பகுதியிலுள்ள ஸ்ரீ சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் திருக்கோயிலுக்கு இன்று (செப்.12) மாலை சுமார் ஆறு மணி அளவில் வந்து சாமி தரிசனம் செய்தார்.
ஊரடங்கு உத்தரவு மற்றும் கோயில்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் கடந்த ஆறு மாதங்களாக, அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு அவர் வராமல் இருந்தார். கோயிலில் இருந்த பக்தர்களுடன் பக்தராய் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தார்.
இவருடன் புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்துவிட்டு ரங்கசாமி கார் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரி அரசு ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது: ரங்கசாமி குற்றச்சாட்டு