ETV Bharat / state

பட்டியலின இளைஞரை தரக்குறைவாகப் பேசிய ஊராட்சி தலைவர் கைது - பொதுமக்கள் கண்டனம்

கோயிலுக்குள் நுழைந்த பட்டியல் இன இளைஞரை சாதிய ரீதியில் தரக்குறைவாக பேசிய ஊராட்சிமன்றத் தலைவரை கைது செய்ததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டதுடன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

public protested the arrest of the Panchayat Chairman disparaging a Scheduled Youth
பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய ஊராட்சி தலைவர் கைதுக்கு பொதுமக்கள் கண்டனம்
author img

By

Published : Jan 30, 2023, 9:27 PM IST

பட்டியலின இளைஞரை தரக்குறைவாகப் பேசிய ஊராட்சி தலைவர் கைது - பொதுமக்கள் கண்டனம்

சேலம்: சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சிப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த வியாழக்கிழமை கோவில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனப் பிரிவைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் போதையில் கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த திருமலைகிரி ஊராட்சிமன்றத் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், அடுத்த நாள் காலையில், பிரவீன் மற்றும் அவரது தாய், தந்தை அனைவரையும் ஊர் பொதுமக்கள் மத்தியில் நிற்க வைத்து அநாகரிமாக மிகவும் முகம் சுளிக்கும் வார்த்தைகளால் கண்டித்து பேசியுள்ளார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருமலைகிரி ஊராட்சி பகுதிக்குச் சென்று பட்டியலின மக்களிடம் நடந்தவற்றை விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ’சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாணிக்கம் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.

இதனையடுத்து, சேலம் இரும்பாலை காவல் துறையினர் திருமலைகிரி ஊராட்சிப் பகுதிக்குச் சென்று ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுகவினர் இரும்பாலை காவல் நிலையம் முன்பு திரண்டு காத்திருந்தனர்.

அப்பொழுது மாணிக்கத்தை காவல் துறையினர் அழைத்து செல்வதை அறிந்த பொதுமக்கள் பிரதான சாலையில் திடீரென அமர்ந்து காவல் துறை வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் அமர்ந்து காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட மாணிக்கத்தை, காவல் நிலையம் உள்ளே அழைத்து வர வழி விடாமல் பொதுமக்கள் அவரை சூழ்ந்து நின்றனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் அவரை இரும்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்பொழுதும் பொதுமக்கள் காவல் நிலைய நுழைவுவாயிலில் நின்று காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் ஒரு சில காவலர்களின் சட்டையும் கிழிந்தது‌. தற்பொழுது காவல் உதவி ஆணையாளர் ஆனந்தி தலைமையில் காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது மகனும் தற்பொழுது காவல் நிலையம் அழைத்துவரப்பட்டுள்ளார். இதனால் இரும்பாலை பிரதான சாலை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

இதையும் படிங்க: பட்டியலின இளைஞரை சாதி குறித்து இழிவாகப்பேசிய ஊராட்சி மன்றத்தலைவர் - தன்னிலை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.