தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பெருந்தொற்றை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் கூட, நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பூரண உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டி , தெலுங்கர் முன்னேற்றக் கழகம் சார்பில் , சேலம் கடைவீதி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.