பொங்கல் தினத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தபடி இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 9 லட்சத்து 72 ஆயிரத்து 118 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 1,557 நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் 12ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று சேலம் கிச்சிப்பாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு வழங்க பேக்கில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மாயமாகியுள்ளது. இதனைக் கண்ட கடை ஊழியர் கடையினுள் வேறெங்கு வைத்துள்ளோம் என தேடி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் கடை ஊழியர் சிவானந்தம் புகாரளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். பணம் காணாமல் போனதால் பொங்கல் பரிசு வழங்குவதில் ஒரு மணிநேரம் தாமதிக்கப்பட்டது. இதனால், பொங்கல் பரிசு பெற குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!
காவல்துறையினர் பணம் காணாமல் போனது குறித்து கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின் மீண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.