சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில் நேற்று இரவு முன்னாள் எம்.பி. அர்ஜுனனுக்கும், வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவலர் ஒருவரை அர்ஜுனன் தாக்கினார். பதிலுக்கு காவலரும் தாக்கவே, ஆத்திரமடைந்த எம்.பி. காவலரை காலால் எட்டி உதைத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதையடுத்து அர்ஜூனனுக்கு எதிராக பல்வேறு கண்டனக் குரல்கள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மதியம் கருப்பூர் காவல் நிலையத்தில் அர்ஜூனன் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றத்திற்காக, அவர் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காவலரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி.யின் வைரல் காணொலி